My page - topic 1, topic 2, topic 3 My page - topic 1, topic 2, topic 3

துல்லிய சாகுபடி உத்திகள்!

பொருளடக்கம்

  1. பதிப்புரை
  2. சம்பா நெல் நாற்றங்கால் தயாரிப்பு 
  3. சம்பா நெல் சாகுபடி  
  4. மானாவாரியில் மக்காச்சோள சாகுபடி
  5. மக்காச்சோளத்தைத் தாக்கும் படைப்புழுக்கள்   
  6. சிறு மக்காச்சோளம் சாகுபடி 
  7. கம்பு சாகுபடி  
  8. நெல் தரிசில் பயறு வகைகள் சாகுபடி  
  9. ஆடி, ஆவணிப் பட்டத்தில் துவரை சாகுபடி
  10. ஆடிப் பட்டத்தில் சூரியகாந்தி சாகுபடி
  11. நெல் தரிசில் எள் சாகுபடி
  12. நெல் தரிசில் பருத்தி சாகுபடி
  13. சத்துக் குறையால் பருத்தியில் ஏற்படும் பாதிப்புகள்   
  14. கரும்பு சாகுபடியில் ஆட்செலவைக் குறைத்தல்  
  15. சொட்டுநீர்ப் பாசனம் வழியே உரமிடுதல்
  16. கரும்பு சாகுபடியில் புதிய உத்திகள்
  17. மறுதாம்புக் கரும்பு சாகுபடி  
  18. கரும்பிலிருந்து வெல்லம் தயாரித்தல்
  19. மரவள்ளிக் கிழங்கு சாகுபடி 
  20. இரட்டிப்பு இலாபம் தரும் ஊடுபயிர்கள்   
  21. கடற்பாசி சாகுபடி
  22. அசோலா சாகுபடி
  23. ஒட்டுண்ணிக் களைகள்    
  24. மஞ்சனத்திக் கட்டுப்பாடு

நூலாசிரியர்கள்

முனைவர் வி.அரவிந்த், க.திவ்யா, முனைவர் சு.திருமேனிநாதன், முனைவர் நா.சா.சுடர்மணியன்

பதிப்புரை

ணவு உற்பத்தியைப் பெருக்கும் நோக்கிலும், வேளாண் பெருமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கிலும், ஒவ்வொரு பயிர் வகையிலும், புதுப் புது இரகங்கள் வந்து கொண்டே உள்ளன. இந்த இரகங்களைப் பயிரிடும் போது, அவற்றின் வளர்ச்சிக்கு உகந்த உத்திகளைப் பயன்படுத்த வேண்டும். அப்படியில்லாத நிலையில், மகசூல் இழப்பையே விவசாயிகள் சந்திக்க நேரிடும்.

இந்நிலையைத் தவிர்க்க, சரியான தொழில் நுடபங்களை விவசாயப் பெருமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த வேலையை ஒருமுறையல்ல, பலமுறை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். இந்தப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளது, 2011 ஆம் ஆண்டிலிருந்து வெளிவரும் விவசாய மாத இதழான பச்சை பூமி.

மேலும், பச்சை பூமி சார்பில், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் நுட்பங்கள் அடங்கிய நூல்களும் வெளியிடப்படுகின்றன. இவ்வகையில், துல்லிய சாகுபடி முறைகள் என்னும் இந்நூல், பச்சை பூமியின் இருபதாம் நூலாகும்.

உணவுப் பயிர்கள், எண்ணெய்ப் பயிர்கள், பணப்பயிர்கள் போன்றவற்றின் சாகுபடியில் கையாள வேண்டிய தொழில் நுடபங்கள் இந்நூலில் சிறப்பாக விளக்கப்பட்டு உள்ளன. மேலும், பாசனம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு உத்திகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

இந்நூலைச் சிறப்பாகவும், விவசாயிகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும், தயாரித்துக் கொடுத்துள்ள முனைவர் வி.அரவிந்த், க.திவ்யா, முனைவர் சு.திருமேனிநாதன், முனைவர் நா.சா.சுடர்மணியன் ஆகியோருக்குப் பச்சை பூமியின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைக் காணிக்கை ஆக்குகிறோம். மேலும், வாய்ப்புள்ள விவசாயிகள் அனைவரும் இந்நூலை வாங்கிப் படித்துப் பயனடைய வேண்டுகிறோம்.

– பசுமை க.முருகேசன், பதிப்பாசிரியர்.

நூலாசிரியர்கள்

துல்லிய சாகுபடி உத்திகள்!

முனைவர் வி.அரவிந்த் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் உழவியல் துறையில் 2011 ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். பின்பு, பெரம்பலூர் ரோவர் வேளாண்மைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக எட்டு ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். 8 வேளாண்மை ஆராய்ச்சிக் கட்டுரைகள், 30 வேளாண்மை சார்ந்த தமிழ்க் கட்டுரைகளை எழுதியுள்ளார். டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் இளம் விஞ்ஞானி, பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் கலாம் இளம் விஞ்ஞானி ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். இப்போது, காரைக்காலில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் உழவியல் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றி வருகிறார்.

துல்லிய சாகுபடி உத்திகள்!

.திவ்யா அவர்கள், பெரம்பலூரில் உள்ள ரோவர் வேளாண்மைக் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் உதவிப் பேராசிரியராகவும், வேப்பந்தட்டைப் பருத்தி ஆராய்ச்சி மையத்தில் ஓராண்டு இணை ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர், 4 வேளாண்மை ஆராய்ச்சிக் கட்டுரைகள், 5 வேளாண்மை சார்ந்த தமிழ்க் கட்டுரைகளை எழுதியுள்ளார். இப்போது, பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மைக் கல்லூரியில் பூச்சியியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

துல்லிய சாகுபடி உத்திகள்!

முனைவர் சு.திருமேனிநாதன் அவர்கள் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் முதுநிலை மற்றும் முதுகலைப் பட்டப் படிப்பை முடித்தவர். தேசிய மற்றும் சர்வதேச அளவில் சிறந்த வாய்வழி விளக்கக்காட்சி விருது மற்றும் மாணவர் மூத்த ஆராய்ச்சி விருதைப் பெற்றவர். 12 வேளாண்மை ஆராய்ச்சி கட்டுரைகள், 12 வேளாண்மை சார்ந்த தமிழ்க் கட்டுரைகளை எழுதியுள்ளார். இப்போது, ஐதராபாத்தில் உள்ள மாதூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், மத்திய வறண்ட நில வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுத்தும், தேசிய பருவநிலை மாற்றத்திற்கு உகந்த மீள் தன்மையுள்ள வேளாண் திட்டத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.

துல்லிய சாகுபடி உத்திகள்!

முனைவர் நா.சா.சுடர்மணியன் அவர்கள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் முதுநிலை மற்றும் முதுகலைப் பட்டப் படிப்பை முடித்தவர். இவர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் தொலையுணர்வு மற்றும் புவிசார் தகவல் துறையில், இணை ஆய்வாளராக மூன்று ஆண்டுகள் பணியாற்றியவர். தேசிய மற்றும் சர்வதேச அளவில் சிறந்த வாய்வழி விளக்கக்காட்சி விருது மற்றும் சிறந்த வாழ்வியல் கட்டுரையாளர் விருதைப் பெற்றவர். 20 வேளாண்மை ஆராய்ச்சிக் கட்டுரைகள், 5 வேளாண்மை சார்ந்த தமிழ்க் கட்டுரைகளை எழுதியுள்ளார். இப்போது, அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையத்தில், வானிலைத்துறை தொழில் நுட்ப வல்லுநராகப் பணியாற்றி வருகிறார்.