My page - topic 1, topic 2, topic 3 My page - topic 1, topic 2, topic 3

மெய்யெழுத்துகள்

பொருளடக்கம்

  1. அணிந்துரை
  2. முன்னுரை
  3. பதிப்புரை
  4. நாடு நாடு திரும்புது
  5. புதையல்
  6. அ(எ)ருமைத் தாயே
  7. கண்ணில் பட்ட மரம்
  8. விண்ணவர் கொடை
  9. உலகேந்தல்
  10. சாலைத் தெய்வங்கள்
  11. தவாத்மா கலாம்
  12. புல்லின் நிழலில்
  13. உழவனின் குதிரை
  14. உழவனின் கதை
  15. வான்வெளித் தாக்குதல்
  16. கானகத்தான்
  17. விளைவுகள்
  18. இன்றும் செம்மறிகள்
  19. மரங்களின் நினைவுகள்
  20. தலைக்கடன் முடித்த தலைவி
  21. மனக்கவலை ஆறும் நாள்
  22. உயிர் செய்வேன்
  23. நடுக; தொடுக
  24. புதிய செல்வம்
  25. நெய்தல் கனவு
  26. இராஜாளிப் பறவை
  27. பனங்காடு
  28. உலகின் உயிர்
  29. விளையாட்டல்ல; வழிபாடு
  30. நலம்வெட்டி
  31. உழவுமாடு
  32. வேப்பமரம்
  33. நீர்க்கொடிகள்
  34. உழவனாகக் கடவது
  35. மழையை உறுதிசெய் இறைவா
  36. தென்னை அன்னை
  37. மரக்கடை மரங்கள்
  38. உயரமானவர்
  39. மரங்களின் மனசு
  40. பூமி பார்த்த வானம்
  41. புகார்க்காண்டம்
  42. விதையின் கதை
  43. புளியமரம்
  44. மட்பாண்டம்
  45. யானைப்புயல்
  46. வளர்த்தவை வளர்த்தன
  47. மரங்களின் உலகம்
  48. முனுசாமி கந்தசாமி
  49. மரங்கள் வாழ்க
  50. மாடு
  51. அமுதமழை பொழிக
  52. உழவன் பதவி
  53. பணமரம்
  54. மனம் வேண்டும்
  55. மண்ணுலகின் மின்விசிறி
  56. உயிரி வைரி
  57. வாழைமரம்
  58. மலர்கள்
  59. ஆசை
  60. மனிதர்களே வாருங்கள்
  61. உயிர்களுக்குள் உயிர்
  62. முன்னுத்தி ஏரு
  63. உதவும் பறவைகள்
  64. மனை கொண்ட கழனி
  65. மரக்கலப்பை
  66. அறப்போர்
  67. காத்திருக்கிறேன்
  68. விதை உறக்கம்
  69. பால் மாடு
  70. அரிசிப்பை அறிவாளி
  71. மண்ணுக்குயிர்
  72.  

நூலாசிரியர்

கவிஞர் மரங்களானவன்

பதிப்புரை

னா ஆவன்னா தெரியாத அம்மாவின் முந்திச் சேலையைத் தவிர, எனக்கு வேறெந்தத் துணையும் இருந்ததில்லை; கிடைக்கவில்லை. கல்வியில், வேலை வாய்ப்பில் என் இலக்கு நோக்கி என்னால் நகர முடியவில்லை. அகவை நாற்பது வரையில் ஆதரவற்ற விவசாயியாக மட்டுமே வயல் வரப்புகளில் வியர்வை சிந்த உழைத்துக் கிடந்த நான், இப்போது இந்த நூலைப் பதிப்பிக்கும் தகுதியில் இருக்கிறேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

நாம் நினைப்பது நடப்பதில்லை; எந்தச் சூழலிலும் நம் சிந்தனையில் எட்டாதது நடக்கிறது என்றால், அதைக் கர்ம வினை என்று தான் சொல்ல வேண்டும். இந்த நூலின் ஆசிரியருக்கும் எனக்கும் இடையிலான நட்புங்கூட அப்படிப்பட்டது தான். இந்தக் கர்ம வினை, என்னை ஊருக்கு நல்லது செய்வோனாக மட்டுமே அழைத்துச் செல்ல வேண்டும் என்று, நான் வணங்கும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

வேடதாரிகள் கூடச் சிரித்துப் பேசி விட்டால், சிந்தையில் இருப்பதை யெல்லாம் கொட்டி விடும் வெள்ளந்தி மனிதன் நான். நம்மால் இயலும் உதவிகளையெல்லாம் அடுத்தவர்களுக்குச் செய்ய வேண்டும் என்னும் எண்ணம் கொண்டவன். அதற்கு, நான் உயர வேண்டும். அப்போது தான் என் எண்ணம் செயலாகும்.

அதன் விளைவு தான் பச்சை பூமி மாத இதழ், பச்சை பூமி பதிப்பகம், பச்சை பூமி இணையதளம், இன்னும் எடுத்து வரும் முயற்சிகள் எல்லாம். அடுத்த நேரம் என்ன செய்யப் போகிறோம் என்று, ஒன்றும் புரியாமல் சென்னையில் அலைந்து திரிந்தவன் கைகளில் இத்தனை அருமைமிகு அடையாளங்கள் வந்து சேர்ந்துள்ளன என்றால், இதற்குக் காரணம், கர்ம வினை என்று தானே சொல்ல முடியும்?

இப்பிறவியின் நோக்கம், என் பசியை, என்னைச் சார்ந்தோர் பசியை ஆற்றுவதும்; நானும் என்னைச் சார்ந்தோரும் சுகமாக வாழ்வதும் மட்டுமல்ல. நான் வாழும் மண்ணுக்கு, சமூகத்துக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் எண்ணற்றவை. அந்த உணர்வின் சிறிய வெளிப்பாடு தான் பச்சை பூமி.

கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து பச்சை பூமி என்னும் மாத இதழை, விவசாயச் சமூகம் மேம்படும் நோக்கில் வெளியிட்டு வருகிறோம். மேலும், வேளாண்மை என்னும் வாழ்வியல் சார்ந்த நூல்களையும் தொடர்ந்து பதிப்பித்து வருகிறோம். இவ்வகையில், இருபத்து மூன்று நூல்களைப் பதிப்பித்து உள்ளோம். மெய்யெழுத்துகள் என்னும் இந்தக் கவிதை நூல் இருபத்து நான்காம் நூலாகும்.

மேலும், வேளாண்மை மேம்படக் களப்பணியும் அவசியம் என்பதை உணர்ந்து, மாவட்டம் தோறும் வேளாண்மைக் கண்காட்சிகளை, வேளாண் குடிமக்கள் பயனுறும் வகையில் சிறப்பாக நடத்தி வருகிறோம். பஞ்சம் பிழைக்க வந்த பாமர விவசாயி, உணவு உற்பத்திக்கான நூல்களைத் தொடர்ந்து பதிப்பித்து வருவதும், தொடர்ந்து களத்தில் இயங்கி வருவதும் கர்ம வினை தான். என் கடன் பணி செய்து கிடப்பதே!

ணிந்துரை, மதிப்புரை என்று, சான்றோர்கள் சிலர், இந்நூலின் கவிதைகள் குறித்துப் பேசியிருப்பதால் நானும் அதற்குள் செல்ல விரும்பவில்லை. இந்த நூலில் இடம் பெற்றுள்ள கவிதைகள் அனைத்தும் இயற்கை சார்ந்தவை; பச்சை பூமி இதழில் வெளியானவை. இந்த இதழ் இவருக்கு உந்து சக்தியைக் கொடுத்து எழுத வைத்தது; கவிஞர் என்னும் அடைமொழியைக் கொடுத்தது. இதை இன்னும் மெருகேற்றிக் கொண்டு தொடர்ந்து பல கவிதை நூல்களைப் படைக்க வாழ்த்துகிறேன்.

– பசுமை க.முருகேசன், பதிப்பாசிரியர்.

நூலாசிரியர் குறிப்பு

மெய்யெழுத்துகள்

விஞர் மரங்களானவன். இவரின் இயற்பெயர் ச.அய்யப்பன். இவரின் பெற்றோர் திரு.பெ.சண்முகம், திருமதி ச.அங்கம்மாள். மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், க.பாப்புநாயக்கன்பட்டி இவர் பிறந்த ஊர். அங்குள்ள கந்தசாமி வித்யாலயா உயர்நிலைப் பள்ளி மற்றும் தே.கல்லுப்பட்டி காந்திநிகேதன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியையும், திண்டுக்கல் காந்தி கிராம கிராமியப் பல்கலைக் கழகத்தில், வேளாண்மைப் பட்டயப் படிப்பையும் முடித்துள்ளார்.

இவர், தமிழ்நாடு அரசின் வேளாண்மைத் துறையில் உதவி வேளாண்மை அலுவலராகப் பணியைத் தொடங்கி, இப்போது துணை வேளாண்மை அலுவலராகப் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி வே.சகிலா, ஆசிரியர் பணியில் இருக்கிறார். இந்த இணையருக்கு இரண்டு புதல்வர்கள் உள்ளனர்.

கடமை தவறாமை மற்றும் பணி நேர்மையைத் தனது இரு விழிகளாகக் கருதும் இவர், தனக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தை, இந்த மண்ணின் மாண்புறு பணியான மரம் வளர்ப்பில் செலவழித்து வருகிறார். மரம் என்னும் மந்திரச் சொல்லில் மயங்கிப் போகும் இவர், மரங்களானவன் என்னும் பெயரில் பொது வெளியில் அடையாளமாகி வருகிறார். இவர் நட்டு வளர்த்துள்ள மரங்கள் எண்ணற்றவை. அந்தப் பணி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, இவரின் மனத்தடாகத்தில் தழைத்துப் பரவும் தாமரைக் கொடிகள், கவிதைகளைப் பூக்கக் காத்துக் கிடந்தன. அந்த நேரத்தில் அவற்றை முகிழ்க்கத் தூண்டும் கதிரொளியாய்ப் பச்சை பூமி அமைய, பசுமையைக் காக்கும் எண்ணற்ற செம்பூக்கள், இதழ் விரித்து எழிலூட்டிக் கொண்டே உள்ளன. அதனால், இவர் கவிஞர் மரங்களானவன் என்னும் சிறப்புக்கும் உரியவராகத் திகழ்கிறார்.