வேலை வாய்ப்பைத் தரும் வேளாண் தொழில்கள்!
பொருளடக்கம்
- பதிப்புரை
- சிப்பிக்காளான் வளர்ப்பு
- பால்காளான் வளர்ப்பு
- மருத்துவக் காளான் வளர்ப்பு
- தரிசு நிலங்களில் மரம் வளர்ப்பு
- மானாவாரியில் பழ மரங்கள் வளர்ப்பு
- அசோலா வளர்ப்பு
- சுருள்பாசி வளர்ப்பு
- தேனீ வளர்ப்பு
- மண்புழு உரம் தயாரிப்பு
- தென்னை நார்க்கழிவு உரம் தயாரிப்பு
- மாடித்தோட்டம் அமைத்தல்
- நவீன நாற்றங்கால் அமைத்தல்
- வெள்ளாடு வளர்ப்பு
- செம்மறியாடு வளர்ப்பு
- பசுமாடு வளர்ப்பு
- எருமை மாடு வளர்ப்பு
- நாட்டுக்கோழி வளர்ப்பு
- ஜப்பானிய காடை வளர்ப்பு
- செல்லப் பறவைகள் வளர்ப்பு
- வாத்து வளர்ப்பு
- கினிக்கோழி வளர்ப்பு
- சீமை வாத்து வளர்ப்பு
- பன்றி வளர்ப்பு
- முயல் வளர்ப்பு
தொகுப்பாசிரியர்கள்
முனைவர் க.வைதேகி, முனைவர் வி.சு.சுகந்தி
பதிப்புரை
வேலை வாய்ப்பைத் தரும் வேளாண் தொழில்கள் என்னும் இந்நூல், பச்சை பூமியின் ஒன்பதாவது நூலாகும்.
பச்சை பூமி மாத இதழில் வெளியிடப்படும் கட்டுரைகளைப் பல்வேறு பிரிவுகளாகப் பிரித்துப் பயன்மிகு நூல்களாக வெளியிட வேண்டும் என்னும் நோக்கத்திலான இந்நூலில், சுய வேலை வாய்ப்பைத் தரும் சிறந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு உள்ளன.
வாழ்க்கைப் பயன் மற்றும் பொருளாதாரப் பயனுள்ள இந்நூல், ஊரக மக்கள் மற்றும் வேலை வாய்ப்பைத் தேடுவோர்க்குச் சுயதொழில் வாய்ப்பைத் தரும் பயனுள்ள நூலாக அமையும். இவ்வகையில், ஆயிரம் கட்டுரைகளில் இருந்து வேலை வாய்ப்புக்கான கட்டுரைகளை, சென்னை, பாரத் நிகர்நிலைப் பல்கலைக் கழக வேளாண்மைக் கல்லூரியில் பணி புரியும் முனைவர் க.வைதேகி அவர்களும், கோவை, காருண்யா பல்கலைக் கழக வேளாண்மைக் கல்லூரியில் பணி புரியும் முனைவர் வி.சு.சுகந்தி அவர்களும் தேர்ந்தெடுத்துத் தொகுத்துக் கொடுத்துள்ளனர்.
தங்களின் பணிச் சூழலுக்கு மத்தியில், இந்த வேலையைச் சிறப்பாகச் செய்து கொடுத்த அவர்களுக்குப் பச்சை பூமியின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் தொகுத்துக் கொடுத்த கட்டுரைகள் அனைத்தும், தகுதிமிகு வேளாண்மை மற்றும் கால்நடை மருத்துவ வல்லுநர்களால் எழுதப்பட்டவை; பல்வேறு காலங்களில் பச்சை பூமி இதழ்களில் வெளியானவை. இந்த வல்லுநர் பெருமக்களுக்கும் பச்சை பூமி சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைக் காணிக்கை ஆக்குகிறோம்.
பச்சை பூமியின் சார்பில் வெளியிடும் ஒவ்வொரு நூலும், கருத்துச் செறிவிலும் சரி, வடிவமைப்பிலும் சரி, தரமானது; செம்மையானது; படித்துப் பயனடையும் வகையில் அமையப் பெற்றது; இன்னார் தான் படிக்க வேண்டும் என்றில்லாமல், எல்லோரும் படிக்கலாம் என்னும் வகையில் உருவாக்கப்படுவது. எனவே, வாய்ப்பிருக்கும் அனைவரும் இந்நூலை வாங்கிப் படித்துப் பயனடைய வேண்டுகிறோம். நன்றி!
– பசுமை க.முருகேசன், பதிப்பாசிரியர்.
நூலாசிரியர்கள்

முனைவர் க.வைதேகி அவர்கள் சென்னையைச் சேர்ந்தவர். சிதம்பரம் அண்ணாமலப் பல்கலைக் கழகத்தில் இளங்கலை வேளாண்மைப் படிப்பை முடித்த இவர், முதுகலை தோட்டக்கலை மற்றும் முனைவர் பட்ட ஆய்வை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் முடித்துள்ளார். முனைவர் படிப்பின் போது இவருக்குப் பல்கலைக் கழக மானியக் குழுவின் விருது கிடைத்துள்ளது.
இப்போது, சென்னையில் உள்ள பாரத் பல்கலைக் கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் முனைவர் க.வைதேகி, தோட்டக்கலைத் துறையின் பல்வேறு பாடப் பிரிவுகளைக் கற்றுக் கொடுப்பதில் அனுபவம் மிக்கவர். மேலும், ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் தொழில் நுட்பக் கட்டுரைகளை நிறைய எழுதியுள்ளார்; எழுதியும் வருகிறார்.