My page - topic 1, topic 2, topic 3 My page - topic 1, topic 2, topic 3

தெரிந்துகொள்ள வேண்டிய வேளாண் செய்திகள்

பொருளடக்கம்

  • பதிப்புரை
  • வேளாண்மையில் பேரழிவை ஏற்படுத்தும் வெப்ப அழுத்தம்
  • தாவர நீர் நிலையை அறிய உதவும் கட்டேஷன் செயல்முறை
  • அப்சிசிக் அமிலம் என்னும் தாவர அழுத்த ஹார்மோன்
  • விதைகள் முளைப்பதில் தாவர ஜிப்பெரெலினின் பங்கு
  • தாவரங்களின் வளர்ச்சியில் குளோரோபிளாஸ்ட்களின் பங்கு
  • திரவ உரங்களைப் பயிர்களுக்கு வழங்கும் தொழில் நுட்பம்
  • பருத்தியில் சத்துக் குறைகளும் உடலியல் கோளாறுகளும்
  • தாவரங்களின் வளர்ச்சியில் நிக்கலின் பங்கு
  • பயறுவகைப் பயிர்களில் மறைக்கப்பட்ட யூரைட்டுகள்
  • வறட்சியில் வளம் தரும் நெல்லி
  • மண்வளம் காக்கும் உயிர் உரங்கள்
  • இலைவழி நுண்ணுரங்களின் பயன்கள்
  • நிலக்கடலை விதை உற்பத்தி
  • மண்வளம் பெருக்கும் பசுந்தழை உரங்கள்

நூலாசிரியர்

முனைவர் பா.இராகவி

பதிப்புரை

ழுதோம் விதைத்தோம் வளர்த்தோம் அறுத்தோம் என்பதில் இருந்து, எப்படி உழ வேண்டும், எதை விதைக்க வேண்டும், எப்படி விதைக்க வேண்டும், எப்படி வளர்க்க வேண்டும், எப்படி, எப்போது அறுவடை செய்ய வேண்டும், அறுவடை செய்த விளைபொருளை எப்படிக் காக்க வேண்டும் என்பதை விளக்குவது வேளாண் அறிவியல்.

மேலோட்டமான இந்தத் தகவல்களுக்குள் எண்ணற்ற வேளாண் அறிவியல் கண்டுபிடிப்புகள் பொதிந்து கிடக்கின்றன. இன்னும் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கின்றன. இன்றைய சூழலில் இவையனைத்தும் சிறப்பான வேளாண்மைக்குத் தேவைப்படுகின்றன. இவை அனைத்தையும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு அரிதாக இருந்தாலும், நாம் சொல்வதைச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

இவ்வகையில், தெரிந்து கொள்ள வேண்டிய வேளாண் செய்திகள் என்னும் இந்நூலில், பெரும்பாலும் சொல்லப்படாத வேளாண் அறிவியல் உத்திகளைச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். நல்ல மகசூலுக்குக் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான உத்திகளில் உள்ள நுணுக்கங்களைச் செய்திகளாகக் கொடுத்திருக்கிறார். அவருக்குப் பச்சை பூமியின் வாழ்த்துகள்!

வாய்ப்புள்ள அனைவரும் இந்நூலை வாங்கிப் படித்துப் பயனடைய வேண்டுகிறோம்.

– பசுமை க.முருகேசன், பதிப்பாசிரியர்.

நூலாசிரியர்

தெரிந்துகொள்ள வேண்டிய வேளாண் செய்திகள்!

முனைவர் பா.இராகவி அவர்கள் பிறந்த இடம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர். இவர், பயிர் வினையியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில், Senior research fellow, Course associate in teaching for M.Sc students, Residential tutor ஆகிய பணிகளில் இருந்துள்ளார். இப்போது நாமக்கல்லில் உள்ள பி.ஜி.பி.வேளாண்மை அறிவியல் கல்லூரியில், பயிர் வினையியல் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

தேசிய உயிரியல் அறிவியல் அகாடமியின் சிறந்த பிஎச்டி ஆய்வறிக்கைக்கான கார்ல் லின்னேயஸ் விருது, ஐந்து முறை best oral presentater விருது, மூன்று முறை best poster presenter விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

உடலியல் திறனைக் கண்டறியும் ஆய்வுக்காக இவர் எடுத்துக் கொண்ட TCH 1819 பருத்தி இரகம், தமிழ்நாட்டில் கோ.17 பருத்தி இரகமாக வெளியிடப்பட்டு, நல்ல மகசூலைக் கொடுத்து வருகிறது.