My page - topic 1, topic 2, topic 3 My page - topic 1, topic 2, topic 3

மானாவாரி சாகுபடி உத்திகள்!

பொருளடக்கம்

  1. பதிப்புரை
  2. மானாவாரி சாகுபடி உத்திகள்
  3. மானாவாரியில் விளையும் பயிர்கள்
  4. மானாவாரிப் பயிர்களில் வறட்சி நிர்வாகம்
  5. மானாவாரி நிலங்களில் மழைநீர்ச் சேமிப்பு
  6. மானாவாரி நிலங்களில் மண்வளம் காத்தல்
  7. மானாவாரியில் மழைநீர்ச் சேமிப்பும் பழமரங்கள் வளர்ப்பும்
  8. மானாவாரிப் பழ மரங்களுக்குள் ஊடுபயிர்
  9. மானாவாரியில் வளரும் மரங்கள்
  10. மானாவாரியில் வளரும் மருத்துவ மரங்கள்
  11. நிலைத்த வருவாயைத் தரும் வேளாண் காடுகள்
  12. குதிரைவாலி சாகுபடி
  13. வரகு சாகுபடி
  14. பனிவரகு சாகுபடி
  15. ஏ.டி.எல்.2 பனிவரகு சாகுபடி
  16. கேழ்வரகு சாகுபடி
  17. சாமை சாகுபடி
  18. தினை சாகுபடி
  19. மானாவாரியில் விளையும் சோள இரகங்கள்
  20. தட்டைப்பயறு சாகுபடி
  21. உளுந்து, பாசிப்பயறு சாகுபடி
  22. துவரை சாகுபடி
  23. நிலக்கடலை சாகுபடி
  24. சூரியகாந்தி சாகுபடி
  25. ஆமணக்கு சாகுபடி
  26. பகுதி மானாவாரி நெல் சாகுபடி
  27. புழுதியில் நேரடி நெல் விதைப்பு
  28. மானாவாரியில் கொத்தமல்லி சாகுபடி
  29. மானாவாரியில் மிளகாய் சாகுபடி
  30. வெட்டி வேர் சாகுபடி
  31. மானாவாரிப் பகுதியை மேம்படுத்தும் உத்திகள்
  32. மானாவாரியில் வெள்ளாடு வளர்ப்பு
  33. மானாவாரிக்கு ஏற்ற ஒருங்கிணைந்த பண்ணையம்

தொகுப்பாசிரியர்கள்

முனைவர் ந.சதீஷ்குமார், முனைவர் ப.துக்கையண்ணன், முனைவர் ஆ.அழகேசன், முனைவர் இரா.ஜெயஸ்ரீனீவாஸ், முனைவர் இரா.நாகேஸ்வரி, முனைவர் இரா.இராதாஜெயலட்சுமி, முனைவர் செ.க.நடராஜன்

பதிப்புரை

சிப்பிணி, எல்லோருக்கும் வருவது. உணவால் மட்டுமே இதைத் தீர்க்க முடியும். நொடிக்கு நொடி பெருகிக் கொண்டிருக்கும் மக்களின் பசியைப் போக்க வேண்டுமெனில், விவசாயமும் நாளுக்கு நாள் வளர்ச்சியடைய வேண்டும். எனவே, உணவு உற்பத்தியைப் பெருக்கும் நோக்கிலும், வேளாண் பெருமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கிலும், ஒவ்வொரு பயிர் வகையிலும், புதுப்புது இரகங்கள் வந்து கொண்டே உள்ளன.

இந்த இரகங்களைப் பயிரிடும் போது, அவற்றின் வளர்ச்சிக்கு உகந்த உத்திகளைப் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், மகசூல் இழப்பையே விவசாயிகள் சந்திக்க நேரிடும். இந்நிலையைத் தவிர்க்க, சரியான தொழில் நுட்பங்களை விவசாயப் பெருமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த வேலையை ஒருமுறை இருமுறையல்ல, பலமுறை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும்.

இந்தப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளது, 2011-ஆம் ஆண்டிலிருந்து வெளிவரும் விவசாய மாத இதழான பச்சை பூமி. மேலும், பச்சை பூமி சார்பில், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த உத்திகளைக் கொண்ட நூல்களும் வெளியிடப்படுகின்றன. இவ்வகையில், மானாவாரி சாகுபடி உத்திகள் என்னும் இந்நூல், பச்சை பூமியின் இருபத்து ஒன்பதாம் நூலாகும்.

மழைநீரை மட்டுமே நம்பிப் பயிரிடக்கூடிய மானாவாரி நில மேம்பாடு, அங்கே விளையும் உணவுப் பயிர்கள், பயறுவகைப் பயிர்கள், எண்ணெய்ப் பயிர்கள், பழப்பயிர்கள் போன்றவற்றில் கையாள வேண்டிய உத்திகள், இந்நூலில் சிறப்பாக விளக்கப்பட்டு உள்ளன. மேலும், பல்வேறு உத்திகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

இந்நூலைச் சிறப்பாகவும், விவசாயிகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும், தயாரித்துக் கொடுத்துள்ள முனைவர் ந.சதீஸ்குமார், முனைவர் ப.துக்கையண்ணன், முனைவர் ஆ.அழகேசன், முனைவர் இரா.நாகேஷ்வரி, முனைவர் ரா.ராதா ஜெயலட்சுமி, முனைவர் செ.க.நடராஜன் ஆகியோருக்கு, பச்சை பூமியின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், வாய்ப்புள்ள விவசாயிகள் அனைவரும் இந்நூலை வாங்கிப் படித்துப் பயனடைய வேண்டுகிறோம்.

– பசுமை க.முருகேசன், பதிப்பாசிரியர்.

நூலாசிரியர்கள்

மானாவாரி சாகுபடி உத்திகள்!

முனைவர் ந.சதீஷ் குமார், இணைப் பேராசிரியர் – உழவியல் துறை, மக்காச்சோள ஆராய்ச்சி நிலையம், வாகரை – 624 613.

மானாவாரி சாகுபடி உத்திகள்!

முனைவர் ப.துக்கையண்ணன், இணைப் பேராசிரியர் – உழவியல், வேளாண்மை அறிவியல் நிலையம், பொங்கலூர், திருப்பூர் – 641 667.

மானாவாரி சாகுபடி உத்திகள்!

முனைவர் ஆ.அழகேசன், இணைப் பேராசிரியர் – உழவியல் துறை, வேளாண்மை அறிவியல் நிலையம், வம்பன்,  துக்கோட்டை – 622 303.

மானாவாரி சாகுபடி உத்திகள்!

முனைவர் இரா.ஜெயஸ்ரீனீவாஸ், இணைப் பேராசிரியர் – உழவியல் துறை, வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குடுமியான்மலை, புதுக்கோட்டை – 622 102.

மானாவாரி சாகுபடி உத்திகள்!

முனைவர் இரா.நாகேஸ்வரி, இணைப் பேராசிரியர் – உழவியல் துறை, தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம், ஆடுதுறை, தஞ்சாவூர் – 612 101.

மானாவாரி சாகுபடி உத்திகள்!

முனைவர் ரா.ராதாஜெயலட்சுமி, உதவிப் பேராசிரியர் – பயிர் நோயியல் துறை, தென்னை ஆராய்ச்சி நிலையம், ஆழியார், கோயம்புத்தூர் – 642 101.

மானாவாரி சாகுபடி உத்திகள்!

முனைவர் செ.க.நடராஜன், இணைப் பேராசிரியர் – உழவியல் துறை, மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், ஏத்தாப்பூர், சேலம் – 636 119.